புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அதிகளவில் வாழும் கனடாவில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து மீளவும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனடா நாட்டின் மிகப்பெரிய நகரமான ரொரண்டோவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அந்நகரத்தில் திங்கள் (நவம்பர் 23) முதல் ஊரடங்கு அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரொரண்டோவில் 28 நாட்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. இதில், உள்ளரங்க கூட்டங்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உடற்பயிற்சி கூடங்கள்,சிகையலங்கார நிலையங்கள், கசினோ போன்ற இடங்கள் மூடப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் ஒரு இடத்தில் பத்துப் பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்துக் கடைகள், மளிகைக் கடைகள் 50 வீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், பார் போன்ற இடங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் உள்ளூர் தொழில்களை காப்பாற்றுவதற்காக அருகில் இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்கும்படி மாகாண அரசு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here